கடந்த தேர்தலில் சஜித் பிரேமதாசவை வெற்றிபெறச் செய்வதற்காக இரண்டு கோடி பணம் என் கையால் செலவு செய்தேன். கடைசியில் ஜெயிலுக்கும் போனேன். என முன்னாள் அமைச்சரும் அஇமக தலைவருமான ரிஷாத் பதியுத்தீன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் யார் பக்கம் செல்வது என முடிவெடுப்பதற்காக மக்கள் கருத்தறியும் கூட்டம் மன்னாரில் இடம்பெற்ற போதே இதனை அவர் தெரிவித்தார்.
இம்முறை ஜனாதிபதி ரனில் ஆதரவு கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார். சஜித்தும் ஆதரவு கேட்டார். அனுர வந்து என்னிடம் ஆதரவு கேட்க்கவில்லை. எனவே அவர் அவுட்.