இந்திய அணிக்கும், இலங்கை அணிக்குமிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரின் மூன்றாவதும், இறுதியுமான போட்டி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் ஆரம்பமாகிறது.
இலங்கைக்கு வெள்ளைபந்து கிரிக்கெட் தொடருக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தலா 3 போட்டிகள் வீதம் கொண்ட ஒருநாள் மற்றும் ரி20 தொடர்களில் ஆடுகிறது. முதல் தொடராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரை இந்தியா 3-0 என்ற அடிப்படையில் முழுமையாக கைப்பற்றியது.
இதனை அடுத்து ஆரம்பமான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது. தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 32 ஓட்டங்களினால் அசத்தல் வெற்றியீட்டி 3 வருடங்களின் பின் இந்தியாவுடன் முதல் ஒருநாள் வெற்றியை பதிவு செய்தது.
இந்நிலையில் இன்று நடைபெறும் மூன்றாவது போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றால் (2-0), அல்லது போட்டி மழையால் கைவிடப்பட்டால் (1-0) இலங்கை அணி தொடரை வென்று 27 ஆண்டுகளின் பின்னர் இந்தியாவுடன் ஒருநாள் தொடரை வெற்றிகொண்ட சரித்திரத்தை படைக்க காத்திருக்கிறது.
மாறாக குறித்த போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தால் தொடர் 1-1 என சமநிலையில் நிறைவுக்குவரும். அப்படியானால் இலங்கை அணி 2006ஆம் ஆண்டின் பின்னர் 18 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியுடன் ஒருநாள் தொடரை தோல்வியடையாமல் சமநிலையில் நிறைவுசெய்த வரலாற்றை பதிவுசெய்யும். எனவே இன்றைய தினம் எப்படியான சாதனை நிகழ காத்திருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
Wednesday, August 7, 2024
27 வருட வரலாற்றை மாற்றியமைக்குமா இலங்கை?
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »