இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரின் முதலாவது போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றுவரும் நிலையில் இந்திய அணியின் வெற்றியிலக்காக 231 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை பெற்றுக்கொண்டது. அதன் அடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 230 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
அதிகபட்சமாக சகலதுறை வீரர் துனித் வெல்லாலகே கன்னி அரைச்சதம் அடித்து 67 ஓட்டங்களையும், ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிசங்க அரைச்சதம் அடித்து 56 ஓட்டங்களையும், பெற்றுக் கொண்டனர். இதன் அடிப்படையில் இந்திய அணியின் வெற்றி இலக்காக 231 ஓட்டங்களில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Friday, August 2, 2024
230 ஓட்டங்களை குவித்த இலங்கை அணி!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »