ஜனாதிபதி தேர்தல் முடிந்து 21 நாட்களுக்குள் அனைத்து வேட்பாளர்களும் தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது .
எந்த ஒரு வேட்பாளரும் குறிப்பிட்ட நேரத்திற்குள் அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறினால் , தவறான தகவலைச் சமர்ப்பித்தால் அல்லது அளவுக்கு அதிகமாக செலவு செய்தால் ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் , பதவி இழப்பு, மூன்று ஆண்டுகள் வாக்குரிமை இழப்பு அல்லது வேட்பாளராக இருக்கும் உரிமையை இழக்க நேரிடும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது .
மேலும் , அவர்களுக்கு உதவியவர்கள் பற்றிய தகவல்கள் மற்றும் நிதி, பொருள் அல்லது கடன் அடிப்படையில் பெறப்பட்ட அனைத்து தகவல்களையும் சேர்த்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும் எனவும் அனுமதிக்கப்பட்ட தொகையை விட அதிகமாக செலவு செய்தால் அவர் குற்றவாளியாகி விடுவார் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது .