ஒகஸ்ட் மாத இரண்டாம் அமர்வு வாரத்துக்கான பாராளுமன்ற அமர்வை 21 ஆம் திகதி மாத்திரம் கூட்டுவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
அதற்கமைய, ஒகஸ்ட் 21 ஆம் திகதி மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.30 வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2366/39 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட அறிவித்தல் மற்றும் கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் 2387/38 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகளை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Thursday, August 15, 2024
21ஆம் திகதி கூடுகிறது பாராளுமன்றம்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »