Our Feeds


Sunday, August 11, 2024

Sri Lanka

மூவின மக்களின் உள்ளங்களை வென்றவர் சஜித் பிரேமதாச - ஜனாஸா எரித்த கோட்டாவின் 20க்கு கை தூக்கிய தௌபீக் எம்.பி புகழாரம்.



எமது நாட்டின் எதிர்கால இருப்பை தீர்மானிக்கக்கூடிய ஓர் முக்கிய காலத்தில் இருக்கிறோம். இச் ஜனாதிபதி தேர்தலில் பல்வேறு வேட்பாளர்கள் போட்டியிட்டாலும்  எமது கட்சி ஆதரவு வழங்கும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மூவின மக்களின் உள்ளங்களை வென்றவர் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் எம். எஸ் தௌபீக் தெரிவித்தார்.


இன்று (9) ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.


மேலும் அவர் தெரிவிக்கையில்,


ஏனைய சிறுபான்மை கட்சிகள் தமது நிலைப்பாட்டை வெளிப்படைய அறிவிக்க அஞ்சுகின்ற சந்தர்ப்பத்தில் தாம் மக்களோடு கலந்துரையாடி மக்களின் கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி கட்சி உயர்பீட தீர்மானத்தின் அடிப்படையில் பல அம்சக்கோரிக்கைகளுடன் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களை ஆதரித்துடன் ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணைந்து கைச்சாத்திட்டதாகவும் குறிப்பிட்டார்.


நாடு பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கியிருக்கின்ற சந்தர்ப்பத்தில் எமது நாட்டை பொருளாதார ரீதியில் உயர்த்துவதற்கு அவசியமான திட்டங்களை கொண்ட பொருளாதார நிபுணத்துவ குழு ஐக்கிய மக்கள் கூட்டணியில் இருப்பதாகவும் தெரிவித்தார்.


அதேபோல், இந்த அரசாங்கத்தில்  சிறுபான்மை மக்களின் மத, நில உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதாகவும் அனைத்தையும் வென்றெடுப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் தெரிவித்தார்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »