வாக்குகளை பெறுவதற்காக அனைவரும் 13 வது திருத்தம் என்பதை உச்சரிக்கின்றனர் என ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரும் முன்னாள் இராணுவ தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்
பேட்டியொன்றில் 13 வது திருத்தம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.
பல விடயங்களை செய்ய முயல்வதன் மூலம் ஒருவர் சமூகங்களின் மத்தியில் பகைமை உணர்வை உருவாக்ககூடாது.
இந்த விடயத்தில் நாங்கள் எதனை செய்தாலும் நாட்டின் அனைத்து மக்களினதும் ஆதரவு அதற்கு அவசியம்.
இந்த பரிந்துரைகளை வடக்குகிழக்கிற்கு மாத்திரம் நடைமுறைப்படுத்தும்போது தென்பகுதி மக்கள் குழப்பத்தில்; ஈடுபட்டால் அதனை உரிய தீர்வாக கருதமுடியாது.
இவை மிகவும் உணர்வுபூர்வமான விடயங்கள்.
இவற்றிற்கு முதல் நாங்கள் நாட்டை அபிவிருத்தி செய்யவேண்டும் நாட்டை அபிவிருத்தி செய்தால் மக்கள் சமாதானமாக வாழபழகிக்கொள்வார்கள். நல்லிணக்கம் அமைதி சமாதானம் போன்றவை காணப்படும்.
பொருளாதாரம் தொடர்பில் நாங்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்ற போது வாக்குகளை பெறுவதற்காக மாத்திரம் அரசியல்வாதிகள் இனப்பிரச்சினை போன்றவற்றை பேசுகின்றார்.
இந்த விடயங்கள் குறித்து பேசுவதற்பு முதலில் நாட்டின் பின்னணி உரிய விதத்தில் காணப்படவேண்டும் .