Our Feeds


Monday, July 8, 2024

SHAHNI RAMEES

#Update: அத்துருகிரிய சம்பவம் – துப்பாக்கிதாரிகள் பயன்படுத்திய கார் மீட்பு..!

 

அத்துருகிரிய நகரில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு காரில் வந்த ஆயுததாரிகள் இரண்டு T56 துப்பாக்கிகளை பயன்படுத்தியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

 

பச்சை குத்தும் நிலையமொன்றில் இடம்பெற்ற குறித்த துப்பாக்கிச் சூட்டில் வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேரா என்ற ‘கிளப் வசந்த’ உட்பட இருவர் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் அதுருகிரிய மற்றும் கொழும்பு 07 ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

இதேவேளை, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பெண்ணொருவரும் ஆண் ஒருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், காயமடைந்த மேலும் இரு பெண்கள் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

துப்பாக்கிதாரிகள் தப்பிச் செல்ல பயன்படுத்தப்பட்ட கார் கடுவெல கொரதொட்ட பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அத்துருகிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »