சாவகச்சேரி வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகரான இராமநாதன் அர்ச்சுனா வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பில் விசேட பேச்சுவார்த்தைக்காக அழைக்கப்பட்டுள்ள நிலையிலும், சுகயீன விடுமுறையின் காரணமாகவும் அவர் வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச நிர்வாக நடைமுறைகளுக்கு எதிராக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வைத்திய பொறுப்பதிகாரி செயற்பட்டு வருவதாக தெரிவித்து அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இன்றைய தினம் குறித்த வைத்திய அதிகாரி மருத்துவ விடுமுறை எடுத்து வைத்தியசாலையில் மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட்ட விடுதியில் தங்கியுள்ளார்.
அவரை பொலிஸார் கைது செய்ய ஆயத்தமாகும் வேளையில் பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க முற்படுவார்கள் என்ற காரணத்தால் குறித்த பகுதியில் கலகம் அடக்கும் பொலிசார் குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.