ஹமாஸ் தலைவரை தீவிரவாதி எனக் கூறியுள்ள “ஹிரு” தொலைக்காட்சியின் செய்திக்கு மேல் மாகாண முன்னாள் ஆளுனர் அஸாத் சாலி கண்டனம்.
பாலஸ்தீன அரசாங்கமான ஹமாஸின் தலைவர் இஸ்மாயீல் ஹனிய்யாவின் மரண செய்தியை “உலகின் மிக பயங்கரமான தீவிரவாத அமைப்பின் தலைவர் மரணம்” என தலைப்பிட்டு “ஹிரு” தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளதுடன், ஹமாஸ் தலைவர் மீதான தாக்குதலை இலங்கை ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்க கண்டித்துள்ள செய்தியை குறிப்பிடும் போதும் “உலகின் மிகவும் பயங்கரமான தீவிரவாத அமைப்பின் தலைவரின் கொலைக்கு ஜனாதிபதி கண்டனம்” எனக் கூறி பாலஸ்தீனத்தின் சுதந்திரத்திற்காக போராடும் அமைப்பின் தலைவரை அவமானப்படுத்தியிருக்கிறது ஹிரு தொலைக்காட்சி இது கண்டிக்கத் தக்கது என்கிறார் முன்னாள் ஆளுனர் அஸாத் சாலி.
ShortNews இன் OpenTalk அரசியல் கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே முன்னாள் ஆளுனர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஹிரு தொலைக்காட்சியின் கடந்த கால வரலாறு எமக்கு தெரியாமல் இல்லை. அவர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பது உலகத்திற்கே தெரிந்தது தான். ஆனாலும் ஒரு சுதந்திர போராட்ட அமைப்பின் தலைவரை இப்படி கொச்சைப்படுத்துவது நல்லதல்ல.
இஸ்மாயீல் ஹனிய்யா என்பவர் பாலஸ்தீனத்தில் ஜனநாயக முறையில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று பாலஸ்தீனத்தின் பிரதமராகவும் ஆளும் அரசின் தலைவராகவும் செயல்பட்டவர் மட்டுமன்றி, அவர் கொல்லப்பட்ட போதும் ஈரான் ஜனாதிபதியின் பதவியேற்புக்காக ஈரானுக்கு சென்றிருந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.
ஈரான் ஜனாதிபதியின் பதவியேற்பில் அவர் தீவிரவாத அமைப்பின் தலைவராகவா அழைக்கப்பட்டார்? இல்லை. அவர் பாலஸ்தீன மக்களின் பிரதிநிதியாக அழைக்கப்பட்டிருந்தார்.
மட்டுமன்றி, பாலஸ்தீனம் இப்போதிருக்கிற இஸ்ரேல் ஆகிய அனைத்து பூமியின் சொந்தக்காரர்களும் அவர்கள் தான் இஸ்ரேல் தான் தீவிரவாத நாடு. என அவர் மேலும் தெரிவித்தார்.
முன்னாள் ஆளுனர் கலந்துகொண்ட OpenTalk நிகழ்வின் வீடியோவை நாளை மாலை எதிர்பாருங்கள்.