பெண்களுக்கான சுய முன்னேற்றம் மற்றும் இஸ்லாமிய வழிகாட்டல்களை சிறப்பாகவும் இலவசமாகவும் செய்து வரும் Rise Up Academy யின் வருடாந்த பரிசளிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கொழும்பு, விளையாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் விமரிசையாக நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் விசேட அதிதியாக கலந்து கொண்ட கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தி அவர்கள் பெண்கள் கல்வியில் சாதிக்க வேண்டும். அதிலும் இஸ்லாமிய பெண்களின் கல்வி வளர்ச்சி பாராட்டுக்குறியது கடந்த காலங்களை ஒப்பிடும் போது இஸ்லாமிய பெண்கள் பல் துறைகளிலும் தமது திறமைகளை வெளிப்படுத்தி வருவது வரவேற்க்கத் தக்கது என்பதுடன், இதற்காக சமூகத் தலைவர்கள் பூரண ஒத்துழைப்புகளையும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
உலகில் மாபெரும் புரட்சிகளை செய்த 100 புரட்சியாளர்களை பற்றி எழுதப்பட்ட The 100 புத்தகத்தில் முதலாவது இடம் இஸ்லாத்தின் இறுதி இறைத் தூதர் முஹம்மத் நபி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தாயின் பாதத்தின் கீழ் தான் சுவனம் இருக்கிறது என பெண்களுக்கு தாய்மை அந்தஸ்தை மட்டுமல்ல பெண்களுக்காக உரிமைகளையும் வழங்கிய மாபெரும் புரிட்சியாளார் அவர். எனவே பெண்களுக்கான கல்வி வாய்பை நாம் வழங்க வேண்டும். அதற்காக பாடுபடும் Rise Up Academy யினருக்கும் எனது வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.