Our Feeds


Monday, July 1, 2024

Sri Lanka

PHOTOS: வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த பெண்களினால் பெண்களுக்காக நடத்தப்படும் Rise up academy யின் பரிசளிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு




பெண்களினால் பெண்களின் மார்க்க மற்றும் சமூக வளர்ச்சிக்காக செயல்படும் Rise up academy நடத்திய வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு 29.06.2024 சனிக்கிழமை கொழும்பு, விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது - அல்ஹம்து லில்லாஹ்.

புனித ரமழான் மாதத்தில் நேரடியாகவும், ஆன்லைன் மூலமும் நடத்தப்பட்ட இஸ்லாமிய பாடநெறிகளுக்கான சான்றிதழ்கள் மற்றும்  Rise up academy யில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான வெற்றிச் சான்றிதழ்கள் ஆகியன குறித்த நிகழ்வில் வழங்கப்பட்டது. 

Rise up academy யின் நிர்வாக இயக்குனர் சகோதரி மௌலவியா பர்வீன் கலீல் அல்-உசைமீனியாத் அவர்களின் தலைமை உரையுடன் ஆரம்பமான நிகழ்வில் IDM Nations Campus நிறுவனரும் சமூக சேவகருமான கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தி அவர்கள் விசேட அதிதியாக கலந்து கொண்டு மாணவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வைத்ததுடன், இஸ்லாமிய பெண்களின் சமூக வளர்ச்சி தொடர்பிலும் உரையாற்றினார்.

சிறப்பு அதிதியாக கலந்து கொண்ட சகோதரி சட்டத்தரணி ஷஸ்னா அவர்கள் கல்வி வளர்ச்சியில் இஸ்லாமிய பெண்களின் முக்கியத்துவம் பற்றி உரையாற்றினார்.

மாணவர்களின் ஆற்றல்களை வெளிப்படுத்தும் வகையிலான சிறப்பு நிகழ்ச்சிகளுடன் சகோதரி சுதர்சிகாவின் “நான் கண்ட நபிகளார்” சிறப்புரை சபையின் வரவேற்புக்குறியதாக அமைந்திருந்ததுடன், சகோதரர் ஜாவித் ஜாமி பூசோவினால் சர்வதேசத்தில் சாதிக்கும் பெண்கள் என்ற தலைப்பில் சிங்கள மொழியில் சிறப்புரையும் ஆற்றப்பட்டது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட IDM Nations Campus நிறுவனரும் சமூக சேவகருமான கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தி மற்றும் சகோதரி சுதர்ஷிகா மற்றும் சகோதரர் சீலன் ஆகியோருக்கு திருமறைக் குர்ஆன் தமிழ் மொழிபெயர்பும் அன்பளிப்பு செய்யப்பட்டதுடன் சகோதரர் ரஸ்மின் MISc அவர்களினால் “இஸ்லாமிய போதனைகளினால் கவரப்பட்ட ஈமானிய மனிதர்கள்” என்ற தலைப்பில் சிறப்புரையும் ஆற்றப்பட்டது.

Rise up academy யின் செயல்பாட்டுக் குழு சார்பில் ஆலிமாக்களான ஷஸ்னா, ஸமீரா ஸகீ, ஆயிஷா, ஷப்னா கலீல் ஆகியோரின் கலந்து கொண்டவர்களுக்க விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது. - அல்ஹம்து லில்லாஹ்.





















Subscribe to this Blog via Email :
Previous
Next Post »