இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனத்தின் விலை திருத்தங்களுக்கு
அமைய, லங்கா IOC நிறுவனமும் தமது எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.இதன்படி, ஒக்டேன் 92 ரக ஒரு லீட்டர் பெட்ரோலின் விலை 11 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலையாக 344 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒக்டேன் 95 ரக ஒரு லீட்டர் பெட்ரோலின் விலை 41 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலையாக 379 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு லீட்டர் சுப்பர் டீசலின் விலை 22 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலையாக 355 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒட்டோ டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம் தெரிவித்துள்ளது.
இந்த விலைத் திருத்தமானது நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்குவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.