Our Feeds


Tuesday, July 23, 2024

SHAHNI RAMEES

#BREAKING: கொவிட் ஜனாஸா எரிப்பு - உடற் தகனம் செய்தவர்களின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கோர அமைச்சரவை அனுமதி

 


கொவிட்-19 தொற்றுநோய்களின் போது இலங்கையில்

அமுல்படுத்தப்பட்ட கட்டாய தகனம் கொள்கை தொடர்பாக அரசாங்கத்தின் மன்னிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரீ மற்றும் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோரால் முன்வைக்கப்பட்ட கூட்டு அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


கொவிட் 19 இன் மருத்துவ மேலாண்மை குறித்து சுகாதார அமைச்சு வெளியிட்ட சுகாதார வழிகாட்டுதல்களின்படி, வைரஸால் இறந்தவர்களின் உடல்களை அப்புறப்படுத்தும் முறையாக தகனம் செய்ய பரிந்துரைக்கப்பட்டது.


அதன்படி, கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட 276 முஸ்லிம்கள் தகனம் செய்யப்பட்டுள்ளனர்.


அதன்பின்னர் 2021ம் ஆண்டு பெப்ரவரி மாதம் கடுமையான கட்டுப்பாடுகளுடன் அத்தகைய நபர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில், கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்த இஸ்லாமியர்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டமைக்கு மன்னிப்பு கோரும் நோக்கில் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »