Our Feeds


Monday, July 8, 2024

SHAHNI RAMEES

#BREAKING - ஜனாதிபதியின் பதவி காலம் தொடர்பில் சட்ட மாஅதிபரின் நிலைப்பாடு வெளியானது

 

தற்போதைய அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியின் பதவிக்காலம் 05 வருடங்கள் என்பது தெளிவாக உள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு இன்று அறிவித்துள்ளார்.


ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பான மனு இன்று (08) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கனிஷ்க டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த மனுவை தள்ளுபடி செய்யக் கோரி ஆட்சேபனை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடையும் திகதி தொடர்பில் விளக்கமளிக்கும் வரை, ஜனாதிபதித் தேர்தலில் நடத்துவதைத் தடுக்க உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு உயர் நீதிமன்றத்தினால் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, விஜித் மலல்கொட, முர்து பெர்னாண்டோ, பிரித்தி பத்மன் சூரசேன மற்றும் S. துரைராஜா ஆகியோர் அடங்கிய 5 பேர் கொண்ட நீதியரசர்கள் முன்னிலையில்  இந்த மனு விசாரிக்கப்பட்டு வருகின்றது.

பிரபல வர்த்தகரான C.D.லெனாவாவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றது




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »