இவ்வருடம் மேற்கொள்ளப்படவுள்ள இரண்டாவது மின் கட்டண திருத்தம் தொடர்பில் மின்சாரக் கட்டணம் 22.5 வீதத்தால் குறைக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
விசேட செய்தியாளர் மாநாட்டை நடாத்திய அதன் தலைவர், வீட்டு மின்சார அலகு ஒன்றின் விலை 8 ரூபாவில் இருந்து 6 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும், 30 முதல் 60 வரை உள்ள வீட்டு மின் அலகுகளின் மதிப்பு 20 ரூபாவிலிருந்து 9 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 30 அலகுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளரின் மாதாந்த மின் கட்டணத்தின் பெறுமதி 280 ரூபா எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மாதாந்தம் 60 யூனிட் மின்சாரத்தைப் பயன்படுத்தும் வாடிக்கையாளரின் மாதாந்த மின்சாரக் கட்டணம் 700 ரூபா எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.