Our Feeds


Tuesday, July 23, 2024

SHAHNI RAMEES

கொழும்பில் வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு..! - வெளியான புதிய தகவல்...

 



கொழும்பு, வார்ட் பிளேஸில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த

முச்சக்கரவண்டியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த நபரின் சடலம் ஒன்றை பொலிஸார் இன்று கண்டு பிடித்தனர். 


இன்று (23) அதிகாலை 1 மணியளவில் பொலிஸ் அவசர இலக்கமான 119 க்கு கிடைத்த தகவலின் படி, குருந்துவத்தை பொலிஸாரால் வார்ட் பிளேஸ் தேசிய பல் வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டியிலிருந்து சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.


பின்னர் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினர் நடத்திய சோதனையில் மித்தெனிய பிரதேசத்தில் வசிப்பவருக்கு குறித்த முச்சக்கரவண்டி சொந்தமானதெனவும் படுகொலை செய்யப்பட்டவர் கொடகவெல பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதான சமிந்த குமாரெனவும் தெரியவந்துள்ளது.


விசாரணையில், முச்சக்கரவண்டியை தனது மைத்துனருக்கு வாடகைக்கு செலுத்த கொடுத்ததாக முச்சக்கரவண்டியின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.


சடலமாக மீட்கப்பட்டவர் பகலில் அலுமினியம் தொடர்பான வேலையில் ஈடுபட்டு இரவில் வாடகை முச்சக்கரவண்டி ஓட்டுநராக இருந்ததாகவும் அத்துருகிரிய பிரதேசத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்ததாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.




கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதில் கொலைசெய்யப்பட்ட நபரின் மார்பிலும் கழுத்திலும் இரண்டு காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.




முச்சக்கரவண்டியின் பக்கவாட்டு கண்ணாடி ஒன்றும் உடைந்துகிடந்ததும் பின் இருக்கைக்கு அருகில் அவரது சடலம் கிடந்ததாலும் பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.




எனினும் கொலை செய்யப்பட்ட நபர் மற்றும் கொலைக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை. அப்பகுதியிலுள்ள சிசிடிவி கெமராக்களை பொலிஸார் சோதனை செய்து வருகின்றனரென தெரிவிக்கப்படுகின்றது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »