Our Feeds


Friday, July 19, 2024

Sri Lanka

கண்டி – திகன முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம்: விசாரணை அறிக்கை எங்கே?



(எம்.ஆர்.எம்.வசீம், இரா.ஹஷான்)


நாட்டில் கடந்த 2018ம் ஆண்டு இடம்­பெற்ற திகன கல­வரம் தொடர்­பாக விசா­ரணை மேற்­கொண்ட மனித உரி­மைகள் ஆணைக்­குழு இது­வரை அந்த அறிக்­கையை வெளி­யி­ட­வில்லை. அதனால் இது­ தொ­டர்­பாக தேடிப்­பார்த்து நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என எதிர்க்­கட்சி உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார்.


பாரா­ளு­மன்­றத்தில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை விசேட கூற்­றொன்றை முன்­வைத்து குறிப்­பி­டு­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.


இது­தொ­டர்­பாக அவர் தொடர்ந்து குறிப்­பி­டு­கையில்,

நாட்டில் இருக்கும் சுயா­தீன ஆணைக்­கு­ழுக்கள் அனைத்தும் அர­சி­ய­ல­மைப்பு பேர­வையின் கீழே செயற்­ப­டு­கின்­றன. அர­சி­ய­ல­மைப்பு பேர­வை­யி­னாலே அந்த ஆணைக்­கு­ழுக்­க­ளுக்கு உறுப்­பி­னர்கள் நிய­மிக்­கப்­ப­டு­கின்­றனர். பேர­வையின் தலைவர் என்­ற­வ­கையில் ஆணைக்­கு­ழுவின் செயற்­பா­டுகள் தொடர்­பாக தேடிப்­பார்க்கும் பொறுப்பு சபா­நா­யகர் என்­ற­வ­கையில் உங்­க­ளுக்கு இருக்­கி­றது.


அதன் பிர­காரம் எமது நாட்டில் 2018 இல் இடம்­பெற்ற திகன கல­வரம் இடம்­பெற்று 6 வரு­டங்கள் கடந்­துள்­ளன. இந்த சம்­பவம் தொடர்­பாக ஆராய்ந்து நட­வ­டிக்கை எடுப்­ப­தற்­காக மனித உரி­மைகள் ஆணைக்­குழு இது தொடர்பில் விசாரணை மேற்­கொண்­டது. ஆனால் கலவரம் இடம்­பெற்று 6 வரு­டங்கள் கடந்­துள்ள போதும் அது தொடர்­பான விசா­ரணை அறிக்கை இன்னும் வெளியிடப்­ப­ட­வில்லை.


எனவே அர­சி­ய­ல­மைப்பு பேர­வையின் தலைவர் என்ற வகையில், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இந்த விசாரணை அறிக்கை தொடர்பாக தேடிப்பார்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.- Vidivelli

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »