பாராளுமன்ற கட்டிடத்தொகுதியை முழுமையாக புனரமைப்பதற்கு அனுமதி கோரி அமைச்சரவை பத்திரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அனேகமாக இன்று அல்லது நாளை இந்த ஆவணம் அங்கீகரிக்கப்படும் எனத் தெரிகிறது. பாராளுமன்றம் ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து முழுமையான சீர்திருத்தம் எதுவும் இடம்பெறவில்லை என அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதனால், பாராளுமன்ற வளாகத்தின் பிரதான மேற்கூரை உள்ளிட்ட பல இடங்கள் பழுதடைந்து அழிந்து வருவதாக அவர்கள் கூறுகின்றனர். நீண்ட நாட்களாக பாராளுமன்ற அறை புனரமைக்கப்படாமல் உள்ளதாகவும் கூறப்படுகிறது.