Our Feeds


Saturday, July 20, 2024

SHAHNI RAMEES

சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் துாங்குவதற்கு தனி இருக்கை

 

இந்திய சட்டசபை கூட்டத்தொடரின் போது, மதிய உணவு சாப்பிட்ட பின், எம்.எல்.ஏ.,க்கள் சிறிது நேரம் துாங்குவதற்கு, சிறப்பு இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளது.



கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் காலையில் தொடங்கி, மதியம் வரை நடக்கும். அதன்பின், மதியம் உணவு இடைவேளை விடப்படும். அப்போது, விதான் சவுதா அருகில் உள்ள எம்.எல்.ஏ.,க்கள் பவனுக்கு செல்லும் பலர், மதிய கூட்டத்துக்கு வருவதற்கு தாமதம் செய்வதாக தெரிகிறது. அதாவது மதிய உணவு முடிந்ததும், சிலர் அறையில் படுத்து துாங்கி விடுவதாக, சபாநாயகர் காதருக்கு தெரிய வந்துள்ளது.



இது குறித்து, சட்டசபையில் நேற்று சபாநாயகர் பேசியதாவது: எம்.எல்.ஏ.,க்களின் வசதிக்காக, காலை சிற்றுண்டி, மதியம் தரமான உணவு வழங்க ஏற்பாடு செ ய்யப்பட்டுள்ளது. மதிய உணவு சாப்பிட்ட பின், சிறிது நேரம் துாங்கி விட்டு வருகிறேன் என்று செல்லும் சில எம்.எல்.ஏ.க்கள், மீண்டும் சட்டசபைக்கு வருவதே இல்லை.



இதை தடுக்கும் வகையில், மதிய உணவு சாப்பிட்ட பின், எம்.எல்.ஏ.,க்கள் துாங்குவதற்காக, சட்டசபைக்கு வெளியே உள்ள வளாகத்தில், 'ரிக்ளைனர்' என்ற சிறப்பு இருக்கை சோதனை முறையில் போடப்பட்டுள்ளது.



அதன் மீது, எம்.எல்.ஏ.,க்கள் சிறிது நேரம் அமர்ந்து துாங்கி விட்டு, பின், சட்டசபைக்கு வரலாம். அந்த இருக்கை வசதியாக இருந்தால், அடுத்த சட்டசபை கூட்டத்தொடர் முதல், முழுமையாக போடப்படும். இவ்வாறு அவர் பேசினார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »