இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி சாங், ஜனாதிபதித் தேர்தலை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தமைக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
X தளத்தில் பதிவொன்றினை வெளியிட்டு அவர் இவ்வாறு நன்றியினை தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்திற்கான இலங்கையின் நீண்டகால அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதித் தேர்தலை செப்டெம்பர் 21ஆம் திகதி நடத்துவது மகிழ்ச்சியான பங்களிப்பாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைப் பிரஜைகள் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், அது அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்க அவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் என்றும் அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.