இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு இருக்கும் என காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.தௌபிக் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்கனவே ஐக்கிய மக்கள் சக்தி ஒற்றுமையின் வேகத்துடன் செயற்பட்டு வருவதாகவும், யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் தமது கட்சியின் உயர் மட்ட குழு இறுதித் தீர்மானத்தை எட்டவில்லையென்றாலும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்டோர் ஏற்கனவே இணைந்து செயற்பட்டுள்ளதால், சஜித் பிரேமதாசவுக்கு உயர் மட்ட குழுவிடமிருந்து ஆதரவு கிடைக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.