வத்தளை - எலகந்த பகுதியில் அமைந்துள்ள கால்வாயில்
ஒன்றிலிருந்து இன்று காலை கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.எலகந்த பகுதியில் அமைந்துள்ள கால்வாயில் சடலம் ஒன்று காணப்படுவதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.