Our Feeds


Saturday, July 20, 2024

SHAHNI RAMEES

மகள் பரீட்சைக்கு செல்ல மறுத்ததால்..., தனக்கு தானே தீ மூட்டி உயிர்மாய்த்த தாய்...

 


கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற க.பொ.த சாதாரணதரப்

பரீட்சையின் நடனபாட செய்முறைப் பரீட்சைக்கு மகள் செல்ல மறுத்ததால் தாயார் தனக்கு தானே தீமூட்டி உயிரிழந்துள்ளார்.    


இந்த சம்பவம் கடந்த 10ஆம் திகதி இடம்பெற்றது.  


பற்றிமா வீதி பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய  5 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


மகள் நடன பாட செய்முறை பரீட்சைக்கு செல்லா விட்டால் தான் மண்ணெண்ணெய் ஊற்றி எரிவேன் என தெரிவித்து தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றியுள்ளார்.  


அதன் பின்னர் தீக்குச்சியை பற்றவைத்த நிலையில் மகளிடம் பேசிக்கொண்டு இருந்தவேளை திடீரென அவரது ஆடையில் தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது.   


இந்நிலையில் அவர் மீது பரவிய தீ அணைக்கப்பட்டு தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  


அவரது சடலம் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »