Our Feeds


Thursday, July 18, 2024

SHAHNI RAMEES

குருநாகல் முன்னாள் மேயர் உள்ளிட்ட ஐவரின் தண்டனை குறைப்பு...!

 


குருநாகல் புவனேகபாகு ராஜசபை கட்டிடத்தை இடித்தமை

தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட குருநாகல் முன்னாள் மேயர் துஷார சஞ்சீவ விதாரண உள்ளிட்ட ஐந்து பிரதிவாதிகளின் சிறைத்தண்டனையை ஒரு வருடமாக குறைத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டுள்ளது.


பிரதிவாதிகளால் சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை வழங்கும் போது நீதிபதி பி.குமாரரட்னத்தின் இணக்கப்பாட்டுடன் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேகோனால் இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 


குருநாகல் மேல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் திகதி முதல் இந்த சிறைத்தண்டனை அமுலுக்கு வரும் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


2020 ஆம் ஆண்டு குருநாகல் புவனேகபாகு ராஜசபை கட்டிடத்தை இடித்தமை தொடர்பான குற்றச்சாட்டை குருநாகல் முன்னாள் மேயர் துஷார சஞ்சீவ விதாரண உட்பட ஐந்து பிரதிவாதிகள் குருநாகல் மேல் நீதிமன்றில் ஒப்புக்கொண்டனர். 


எனினும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட விதம் சட்டத்திற்கு முரணானது எனக் கோரி குருநாகல் முன்னாள் மேயர் உள்ளிட்ட பிரதிவாதிகளால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுக்கள் மீது தீர்ப்பளித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »