சமூக வலைத்தளங்கள் மூலம் விற்கப்படும் சில மருந்துகளிலும், சருமத்தை வெண்மையாக்க விற்கப்படும் மருந்துகளிலும் தீங்கு விளைவிக்கும் சில பொருட்களை கண்டறிந்துள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
“உலக தோல் சுகாதார தினத்தை” முன்னிட்டு, சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தேசிய வைத்தியசாலையின் தோல் சிகிச்சை நிபுணர் டொக்டர் இந்திரா கஹ்விட்ட இதனைத் தெரிவித்தார்.
சருமத்தை வெண்மையாக்க பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான க்ரீம்களால் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை விட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் அதிக வெப்பம் காரணமாக தோல் நோய்கள் அதிகம் காணப்பட்டன. இவ்விடயத்தில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். தோலின் நிறத்தை நீக்கச் செல்வதன் மூலம் சூரியக் கதிர்கள் நேரடியாக சருமத்தில் படுவதால் புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படலாம். சிறுநீரகம் தொடர்பான நோய்களும் வரலாம்… இதில் கவனம் செலுத்த வேண்டும்.