ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சிறுபான்மை அரசியல் கட்சித் தலைவர்களுடன் அவர்களது கருத்துக்கள் குறித்து பல்தரப்பு கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது.
இக்கலந்துரையாடலானது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ ரவூப் ஹக்கீம் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அலி ஷாஹிர் மௌலானா, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கெளரவ ரிஷாட் பதியுதீன், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான் கௌரவ மனோ கணேசன் மற்றும் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களுமான கௌரவ எம்.ஏ. சுமந்திரன் கௌரவ சாணக்கியன் மற்றும் கௌரவ ஸ்ரீதரன் ஆகியோரின் பங்கேற்புடன் ஆரம்பிக்கப்பட்டது.
மேலும், இலங்கையின் மிகப் பெரிய தொழிற்சங்கமாகவும், பெருந்தோட்டத்தின் முக்கிய அரசியல் கட்சியாகவும் விளங்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸானது இலங்கையின் முன்னேற்றத்திற்காக எப்போதும் பாடுபட்டு வருவதுடன் எதிர்காலத்தில் நாட்டின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்தும் இயங்கும்.