பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தின் பயங்கரவாத எதிர்ப்புத்துறை (CTD) ஜேலும் மாவட்டத்தில் நடத்திய சோதனையில் பயங்கரவாத அமைப்பான அல்-கொய்தாவின் தலைவர் அமீன் முஹம்மது உல் ஹக் சாம்கான் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஒரு பிரதான தேடுதல் நடவடிக்கையின் போது, ஒசாமா பின்லேடனின் நெருங்கிய உதவியாளரான அமீன் உல் ஹக்கை கைது செய்துள்ளதாகவும், அவருடைய பெயர் ஐக்கிய நாடுகள் சபையின் உலகளாவிய பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தது என்றும் CTD தனது அறிக்கையில் கூறியுள்ளது.
பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் குறிப்பிடத்தக்க ஒரு முன்னேற்றமாக இந்த கைது நடவடிக்கை கருதப்படுகிறது.
அமீன் முஹம்மது உல் ஹக் பெரிய அளவிலான பயங்கரவாதத் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.