அக்குறணை நகரில் தீ விபத்தில் எரிந்துள்ள மிலானோ உணவகம்
மற்றும் வெதுப்பகம்(Bakery) அமைந்துள்ள கட்டிடத்தையும் அருகில் பாதிப்புக்குள்ளான இடங்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் சென்று பார்வையிட்டார்.
நடந்தவற்றை விபரமாகக் கேட்டறிந்து, அதன் உரிமையாளருடனும், ஏனையோருடனும் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடியதோடு , இவ்வாறான திடீர் விபத்துக்களை தவிர்ப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் சாத்தியமான வழிவகைகள் குறித்தும் கவனம் செலுத்தினார்.