Our Feeds


Wednesday, July 24, 2024

Sri Lanka

மொட்டுக் கட்சி சரியான நேரத்தில் சரியான முடிவை எடுக்கும்!

தற்போதைய ஜனாதிபதி திரு ரணில் விக்ரமசிங்க இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதியாக பதவியேற்காமல் இருந்திருந்தால் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்திக்கு ஏற்பட்ட நிலையே எமக்கும் ஏற்பட்டிருக்கும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மொட்டுக் கட்சி சரியான நேரத்தில் சரியான தீர்மானத்தை எடுக்கும் என்ற நம்பிக்கை தமக்கு இன்னும் இருப்பதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நெலும் மாவத்தை அலுவலகத்தில் நேற்று (23) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்கள் முன்னிலையில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் அளித்த பதில்கள் வருமாறு:

கேள்வி - நீங்கள் இருவரும் இருவேறு கருத்துடையவர்கள். சரியான கருத்தை எங்களுக்காவது சொல்லுங்கள்?

பதில் - ஒரு வாரத்திற்குள் சொல்வார்கள்.

கேள்வி - அது ஏன்?

 பதில் - என்னுடைய கருத்து முடிந்துவிட்டது. எனக்கு புதிதாக சொல்ல ஒன்றுமில்லை. நான் மாறவில்லை.

கேள்வி - அதாவது ரணில் அவர்கள்  தேவை.

பதில் - ஆம்

கேள்வி - திஸ்ஸகுட்டியாராச்சி மொட்டுக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் தேவை என்று கூறுகிறார்.

பதில் - அது சரி. நாங்கள் இருவரும் நல்ல வேட்பாளர்களை விரும்புகிறோம்.

கேள்வி - நல்லவர் யார்?

பதில் - நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸகுட்டியாராச்சி - நீங்கள் ஏன் இவ்வாறு கவலைப்படுகிறீர்கள்?

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க -  இந்த மண்ணில் இதைக் கேட்காதீர்கள். வெளியில் கேட்டால் பதில் சொல்வேன். இந்த ஐயாவைக் கேளுங்கள். இவர் தான் இன்றைய தலைவன்.

கேள்வி - மொட்டுக் கட்சியில்  வெற்றி பெற வேண்டும் என்றால் எந்த வேட்பாளர்களை நிறுத்த வேண்டும். நீங்கள் கட்சி அலுவலகத்தில் இருக்கவில்லை, இப்போது வீதியில் இருக்கிறீர்கள்.

பதில் - நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க - இந்தக் கட்சியை உருவாக்கியது நான்தான். இந்த கட்சியை சேதப்படுத்துவதை நான் பார்க்க விரும்பவில்லை. அதனால்தான் அதைப் பற்றி பேச நான் தயாராக இல்லை. ஆனால் மேடையில் எனது கருத்தை தெளிவாக கூறி விட்டேன். நான் இன்னும் அந்தக் கருத்தில்தான் இருக்கிறேன்.

கேள்வி - அது என்ன கருத்து?

பதில் - ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருக்க வேண்டும். அரகல போராட்டம் வேறொருவரின் கைக்கு சென்றிருந்தால் அமரகீர்த்திக்கு நடந்தது  மகிந்த, கோத்தபாயவுக்கு, எங்களுக்கு நடந்திருக்கும் என்பதை செய்ந்நன்றியுள்ள மக்கள்  இன்று நினைவில் கொள்ள வேண்டும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »