ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனக்கு ஆதரவு வழங்கும் அரசியல்வாதிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் "இந்தப் பயணத்தில் ஆரம்பத்திலிருந்தே என்னுடன் துனை நின்ற எம்.பி.க்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நாட்டை மீட்டெடுப்பதில் உங்கள் ஆதரவு வெற்றிப் படிகளை சாத்தியமாக்கியதில் முதன்மையானது.
நாடு நெருக்கடியில் இருந்தபோது, எரிபொருள், மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்காக மக்கள் போராடும்போது என்னையும் எனது திட்டத்தையும் நீங்கள் நம்பினீர்கள். சவால்கள் சமாளிக்க முடியாததாகத் தோன்றிய சந்தர்ப்பத்தில் உங்களது அர்ப்பணிப்புக்கள் அளப்பெரியன.
மேலும், எம்மோடு இணைந்த எம்.பி.க்களுக்கும் நாட்டின் முன்னேற்றத்தைக் கண்டு, மாற்றத்தின் ஒரு பகுதியாக இருக்கும் தேர்ந்தெடுத்தீர்கள் அதற்கும் எனது நன்றிகள்.
இப்போது எங்களுடன் இணைந்திருப்பவர்களை வரவேற்கிறோம். நேர்மறையான சிந்தனைகளை பகுத்தறிந்து கட்சி அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றாக இணைவதன் முக்கியத்துவத்தை நீங்கள் தற்போது புரிந்துள்ளர்கள்.
ஒன்றாக இணைவதால், நாம் இன்னும் சாதிக்க முடியும்.
இன்னும் எங்களுடன் இணையாத எம்.பி.க்களும் எங்களோடு இணைவதை வரவேற்கும் அதேநேரம், செழிப்பான, ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்புவதற்கான எமது பணி தொடரும் என்பதை உறுதிப்படுத்துவதுடன், மேலும் அதனை நனவாக்க ஒவ்வொருவரும் தயாராக இருக்க வேண்டும்.
இந்த பயணம் எளிதானதல்ல, ஆனால், ஒன்றாக இணைவதன் மூலம் நிலைபேற்றை அடையலாம்.
அனைவரும் ஒன்றிணைந்து நமது எதிர்பார்ப்புடனான இலங்கையை உருவாக்குவோம்.
நமது நாட்டின் எதிர்காலத்திற்கான உங்கள் அர்ப்பணிப்பு, தைரியம் மற்றும் அர்ப்பணிப்புக்கு நன்றிகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.