அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவை இன்று (18) முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கட்டாய விடுமுறையில் அனுப்ப தேசிய பொலிஸ் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
தற்போது நிலந்த ஜயவர்தன சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக (நிர்வாகம்) கடமையாற்றுகிறார்.