உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் தொடரப்பட்ட
வழக்கு தொடர்பில் கொழும்பு நீதவான் நீதிமன்றினால் விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடையின் கீழ் இன்று (21) இலங்கை வந்த. அசங்க அபேகுணசேகர, கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அசங்க அபேகுணசேகர பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் என்பதுடன் அவர் முன்னாள் அமைச்சர் ஒசி அபேகுணசேகரவின் புதல்வர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இந்த வெளிநாட்டு பயணத் தடையை விதித்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையப் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
இன்று அதிகாலை 03.19 மணியளவில் தோஹாவில் இருந்து கட்டார் ஏர்வேஸ் விமானமான KR-658 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது குடிவரவு குடியகழ்வு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.