பொலிஸ்மா அதிபரின் பிரச்சினைக்கு உடனடி தீர்வை கோரி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் எழுத தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் கூட்டம் ராஜகிரியில் உள்ள தேர்தல் செயலக வளாகத்தில் நேற்று (30) நடைபெற்றது.
ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பிலான பல விடயங்கள் தொடர்பில் அந்தக் கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல் ஆணைக்குழு கூடுவது இதுவே முதல் முறையாகும்.