மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில்
ஈடுபட்டுள்ள இந்திரா புற்றுநோய் அறக்கட்டளைக்கு, காலி மார்வெல்ஸின் மஹேஷ் தீக்ஷன தனது ஆட்ட நாயகன் விருதுக்கான பணத்தை வழங்கியுள்ளார்.ஜூலை 14, 2024 அன்று தம்புள்ளை சிக்சர்ஸ் மற்றும் காலி மார்வெல்ஸ் அணிகளுக்கு இடையிலான லங்கா பிரீமியர் லீக் போட்டியில் போது தீக்ஷன வென்ற 1,500 அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கினார்.
கடந்த ஜூலை 14, ஞாயிற்றுக்கிழமை, இடம்பெற்ற போட்டியில் ‘மார்பக புற்றுநோய்’ பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக LPL பிங்க் தினம் என்ற தொணிப்பொருளில் போட்டி இடம்பெற்றது.
"ஸ்டிரைக் வித் ஹோப்: LPL Goes Pink for Breast Cancer Awareness' என்ற தலைப்பில் நடந்த பிரச்சாரத்தில், 'பிங்க் டே' அன்று அனைத்து வீரர்களும் ஆதரவாளர்களும் 'பிங்க்' நிற ஆடைகளை அணிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.