இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் 83 ஆம் உறுப்புரையின் (ஆ) பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள 'ஆறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட' எனும் சொல்லுக்கு மாற்றாக 'ஐந்து ஆண்டுகளுக்கு மேற்பட்ட' எனும் சொல்லை பதிலீடு செய்து அரசியலமைப்பின் 83 ஆம் உறுப்புரையின் (ஆ) பந்தியைத் திருத்தம் செய்வதற்காக 2024.07.09 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை ரீதியான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க, சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது.
குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில்
வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காகச் சமர்ப்பிப்பதற்கும்
ஜனாதிபதியும், நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.