Our Feeds


Saturday, July 27, 2024

Sri Lanka

வடக்கில் இருந்து குறைந்த விலையில் கொழும்பிற்கு பழங்கள்...



வடமாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் மலிவான பழங்களை கொழும்பிற்கு கொண்டு வந்து சலுகை விலையில் பாவனையாளர்களுக்கு வழங்கும் வேலைத்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள நுகர்வோர் அதிக விலை கொடுதது பழங்களை கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


வடமாகாண அபிவிருத்தி தொடர்பாக் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (26) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே வடமாகாண ஆளுநர் இதனைத் தெரிவித்தார்.


வடமாகாணத்தில் விளைவிக்கப்படும் பழங்களை கொழும்புக்கு கொண்டு செல்வதில் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினைகள் போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாமை மற்றும் களஞ்சிய வசதிகளுக்கு அதிக செலவு செய்ய வேண்டியுள்ளது என்பதை சுட்டிக்காட்டிய ஆளுநர், தான் இது குறித்து போக்குவரத்து அமைச்சருடன் கலந்துரையாடியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.


இதற்காக விசேட நிதி மூலமொன்று ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதனூடாக வடமாகாணத்தில் உள்ள ஒவ்வொரு புகையிரத நிலையங்களிலும் களஞ்சியசாலைகள் நவீனமயப்படுத்தப்பட்டு வடக்கின் பழங்களை கொழும்பிற்கு கொண்டு வருவதற்கான துரித அமைப்பு ஏற்படுத்தப்படும் என்றும் போக்குவரத்து அமைச்சர உறுதியளித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »