யாழ்ப்பாண செட்டிக்குறுச்சி பகுதியில் குளவி கொட்டியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குளவி கொட்டுக்கு இலக்கான பெண் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்தனர்.
செட்டிக்குறுச்சி பண்டத்தரிப்பைச் சேர்ந்த 67 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் தனது வீட்டினருகே பனை ஓலைகளை வெட்டிக் கொண்டிருந்தபோது குளவிக் கொட்டுக்கு இலக்கானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.