ரயில்வே ஊழியர்கள் மீண்டும் ஒருமுறை மக்களுக்கு
அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அவர்கள் சேவையை விட்டு விலகியவர்களாகவே கருதப்படுவார்கள் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.போக்குவரத்து அத்தியாவசிய சேவையாக மாறியுள்ள நிலையில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவது மிகவும் தவறானது எனவும், ரயில்வே ஊழியர்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்ச்சைக்குரிய சூழலுக்கு வழிவகுத்த 2020 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட ஹட்டன் புதிய ரயில் நிலையம் மற்றும் வணிக வளாகம் இன்னும் திறக்கப்படாத நிலையில், அதனை கண்காணிக்கும் விஜயத்தில் இணைந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.