Our Feeds


Saturday, July 6, 2024

Zameera

சட்டவிரோத செயற்பாடுகள் தொடரபில் பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை செயலாளர்கள் அவதானம் செலுத்தவேண்டும் அமைச்சர் டக்ளஸ்


 சட்டவிரோத செயற்பாடுகள் தொடரபில் பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை செயலாளர்கள் கூடிய அவதானம் செலுத்தவேண்டும் என யாழ்ப்பாண ஒருங்கிணைப்பு  குழுவின் இணைத்தலைவரும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதிபன் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவரும்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும்  இணைத்தலைவரும் வடக்கின் ஆளுனருமான திருமதி சாள்ஸின் தலைமையில் வெள்ளிக்கிழமை (5) நடைபெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார்

கடந்த கூட்ட முன்னேற்ரம் தொடர்பில் கலந்துரையாடப்பட்ட வேளை  சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தலின் முன்னேற்றம் சுண்ணக்கல் அகழ்வு மற்றும் வெளி இடங்களுக்கு சட்டவிரோதமச்க கொண்டு செல்லல்தொடர்பில் ஆராயபட்ட போது குறித்த விடயத்தை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் பிரதேசத்திற்கு பொறுப்பானவர்கள் என்ற வகையில் பிரதேச செயலாளர்கள், பிரதேசபை சபை செயலாளர்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டும் சுண்ணக்கல் அகழ்வு தொடர்பில் 80ஆண்டு காலப்பகுதியில் தொண்டப்பட்டதையும் தற்போது கூறியமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது சில இடங்களை நான் நேரில் சென்று பார்த்தபோது உழவு இயந்திரம் ஒன்று எம்மை கண்டு வேகமாக சென்றதையும் அவதானிக்க கூடியதாக இருந்தது  எனவே சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பில் கூடிய அக்கறை எடுக்க வேண்டும் என்றார்

இந்த கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் ஸ்ரீமோகன், பிரதேச சபைகளின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள்,  திணைக்களத் தலைவர்கள் ,பொலிசார் மூப்படையினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுடனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »