எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலுக்காக தேர்தல்கள் செலவு ஒழுங்குமுறைச் சட்டம் கண்டிப்பாகப் பயன்படுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்கவை நாம் தொடர்புகொண்டு கேட்டபோது, சர்வஜன வாக்கெடுப்பு தவிர நடைபெறும் அனைத்து தேர்தலிலும் இந்த சட்டம் பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
தேர்தல்கள் செலவு ஒழுங்குமுறைச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் கட்சியின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.