எத்தியோப்பியா கெஞ்சோ சாச்சா கோஸ்டி மாவட்டத்தின் கோபா மண்டலத்தில் பெய்த கன மழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 229பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்றைய தினம் 157பேர் உயிரிழந்துள்ளதாக பதிவாகியிருந்த நிலையில், தற்போது அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், மண்சரிவில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணி தொடர்ந்து வருவதாகவும் இன்னும் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கோபா மண்டல தகவல் தொடர்பு அலுவலகத்தின் தலைவர் கூறியுள்ளார்.