கண்டி மத்திய கடைத்தொகுதியில் நடத்தப்படும் ஹோட்டல் ஒன்றில் தேநீர் மற்றும் குளிர்பானம் விற்பனை செய்யும் போர்வையில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டிருந்த ஹோட்டல் உரிமையாளருடன் ஊழியரொருவரை 08 கசிப்பு போத்தல்களுடன் கண்டி பிரதேச ஊழல் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் குளிர்பான போத்தல்களில் கசிப்பை பொதி செய்தும் தேநீர் கோப்பையில் தேநீர் அருந்த கொடுப்பது போல் வழங்கியுள்ளனர். ஹோட்டலின் காசாளரிடம் பணம் செலுத்திய பின்னர், ஹோட்டலின் தேநீர் கவுண்டரில் இருக்கும் நபரொருவர் தேநீர் கோப்பையில் கசிப்பை ஊற்றிக் கொடுக்கப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.