கடந்த சில மாதங்களாக தேர்தலை நடாத்தவார்களா இல்லையா என்ற உரையாடல் சமூகத்தில் நிலவியது. அது ரணில் விக்கிரமசிங்க தேர்தலை எதிர்கொள்ளாமல் பலவந்தமாக அதிகாரத்தில் இருப்பதற்காக செயலாற்றிக் கொண்டிருந்தமையாலாகும். அவர் ஏதோ ஒரு அதிர்ஷ்டம் காரணமாக சனாதிபதி கதிரையில் அமர்ந்தார். தேர்தலுக்குச் சென்றால் கதிரையிலிருந்து கீழேதான். அதனால் தேர்தலை தவிர்த்துக் கொள்வதற்காக சனாதிபதி பதவிக்காலம் பற்றி நீதிமன்றத்திடம் வினவினார். அந்த வினவலுக்கு ஒரு இலட்சம் தண்டப்பணம் விதிக்கப்பட்டது. மீண்டும் அரசியலமைப்பின் 19 வது திருத்தம் தவறானதெனக்காட்டி அதனை தீர்த்துக்கொள்ளும்வரை தேர்தலை பிற்போடுமாறு கோரி ஒரு வழக்கினை தாக்கல் செய்தார்கள். வழக்கினை தாக்கல் செய்தவருக்கு ஐந்து இலட்சம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது. அடுத்ததாக 22 வது திருத்தம் ஐந்து வருடங்களே என்பதை உறுதிசெய்து கொள்வதற்காக திருத்தமொன்று கொண்டுவரப்பட வேண்டுமெனக் கூறினார்கள். அந்த செயற்பாங்கு நிறைவடையும் போது சனாதிபதி தேர்தல் நடாத்தப்பட்டு ரணில் வீட்டுக்கும் போய்இருப்பார்.
தற்பொது மாகாண சபைகளின் அதிகாரம் ஆளுனர்களிடமே இருக்கின்றது. அளுனர்களால் இணைப்புச் செயலாளர்களை நியமித்துக்கொள்ள முடியுமென ரணில் கூறினார். அவ்வாறுகூறி பிரதேச தலைவர்களுக்கு அதிகாரத்தைக் கொடுக்க முனைந்தார். தேர்தல்கள் ஆணைக்குழு அதனை நிறுத்தியது. அதன் பின்னர் ஊர்களில் சமுதாய ஆலோசனைக் குழுக்கள் போன்ற ஒன்றை உருவாக்கி அரசாங்கத்தின் பணத்தை கட்சி ஆதரவாளர்கள் ஊடாக செலவிட முயன்றார். உயர்நீதிமன்றம் அதனையும் தடுத்தது. அதன் பின்னர் குற்றச்சாட்டுக்குஇலக்காகிய ஒருவரை பொலிஸ் மா அதிபராக்கினார்கள். உயர்நீதிமன்றம் அதனையும் நிறுத்தியது. இலங்கை வரலாற்றில் முதல்த்தடவையாக பொலிஸ் மா அதிபரை தொழில் இடைநிறுத்தம் செய்தது. இப்போது பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிக்க வேண்டும் அதற்கான அதிகாரம் சனாதிபதிக்கே உண்டு. அதற்கும் ஏதாவது தில்லுமுல்லுபண்ண விளைகிறார்கள். பொலிஸ் திணைக்களத்தை செயலிழக்கச் செய்வித்து தேர்தலை அதன் மூலமாகவேனும் நிறுத்தமுடியுமா எனப் பார்க்கிறார்கள். சனாதிபதி தெரத்தலுக்கு மத்தியில் பாராளுமன்றத்தைக் கலைத்தல் பற்றிய பேச்சும் அடிபடுகிறது. அவ்வாற இடம்பெற்றால் ரணில் அன்றைய தினமே வீடு செல்வார். தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து மக்கள் ஆரம்பித்துள்ள அரசியல் பயணம் தற்போது வளர்ச்சியடைத்துள்ளது.
தமது பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்காகவும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகவும் இங்கே இருப்பவர்கள் பல தடவைகள் வாக்குகளை அளித்திருக்கிறார்கள். உலகம்வேகமாக முன்நோக்கி நகர்ந்தது. எனினும் இறுதியாக எமது நாடு பொருளாதாரரீதியாக வீழ்த்தப்பட்டது. 1980 இல் வியட்நாமின் ஏற்றுமதி வருமானம் 40 கோடியாகும். இலங்கையில் 150 கோடியாகும். இன்று எமது ஏற்றுமதி வருமானம் 12 பில்லியன் டொலர்களாகும். வியட்நாமில் 420 பில்லியன் டொலர்களாகும். தென்கொரியா 1950 இல் 25 மில்லியன் டொலராகும். எங்கள் எற்றுமதி வருமானம் 316 மில்லியன் டொலராகும். இன்று எமது ஏற்றுமதி வருமானம் 12 பில்லியன் டொலர்களாகும். தென்கொரியாவில் 685 பில்லியன் டொலராகும். இது மகிந்த, ரணில், தினேஷ் பல வருடங்கள் ஆட்சிசெய்த நாடாகும். நாங்கள் எவ்வளவு பின்நோக்கிச் சென்றுள்ளொம். சுக்கான் எவருடைய கையில் இருந்தது. இந்த ஆட்சியாளர்கள் தோல்வியின் அடித்தளத்திற்கே சென்றுள்ளார்கள். தமது இருப்பிற்காக சிறிய சிறிய வேலைகளை செய்து வருகிறார்கள். பொய்வாக்குறதிகளை அளித்து வாக்குகளைப்பெற்று தமது வேலைகளை செய்துகொண்டார்கள். வீதியை அமைத்தோம், லயிற் கொடுத்தோம், மதகுகளை அமைத்தோம் என்று கூறி வாக்குகளைப்பெற்று அவர்கள் கரை சேர்ந்தார்கள். நாடு பின்நோக்கி நகர்ந்தது. பொருளாதாரம் சீரழிந்து விட்டதென்பது அவர்களுக்கு ஒரு பிரச்சினையல்ல. மக்கள் பலநாட்கள் எரிபொருள் வரிசையில் இருக்கையில் அவர்களுக்கு தனிவேறான ஷெட் கொடுக்கப்ட்டது. அதில் எண்ணெய் அடித்துக்கொள்ளாத ஒரேயொரு கட்சி தேசிய மக்கள் சக்தி மாத்திரமே. எண்ணெய் விலை அதிகரிக்கையில் மக்களால் தாங்கிக்கொள்ள முடியாதிருக்கையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எரிபொருள் கொடுப்பனவினை ஒரு இலட்சம் ரூபாவினால் எரிபொருள் கொடுப்பனவினை அதிகரித்தார்கள். தேசிய மக்கள் சக்தி மாத்திரமே அதனை பெற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் வகுத்த கொள்கை காரணமாகவே எண்ணெய் தட்டுப்பாடு எற்பட்டது.
மக்கள் பச்சை நிறத்திற்கு, நீல நிறத்திற்கு எந்த நிறத்திற்கு வாக்களித்தாலும் இறுதிப் பெறுபேறு இதுதான். நாங்கள் பழைய கதைகளை மற்ந்துிடுவோம். அனைவரும் ஒன்றுசேர்ந்து பொதுமக்களின் அரசாங்கமொன்றை அமைத்திடுவோம். எங்கள் ஊடகங்களால் பாரிய அழுத்தம் கொடுக்க முடியும். ஏனைய காலங்களில் சுயாதீனமாக செயற்பட்டாலும் தேர்தல் நெருங்குககையில் ஊடகங்களும் தமது பாசறைகளை அமைத்துக்கொள்கின்றன. அந்த பாசறைகளுக்கு தேவையான அளவில் பணம் பம்ப் பண்ணப்படுகின்றது. தேர்தல் இயக்கத்திற்காக கோடிக்கணக்கில் பணம் ஒதுக்கப்படுகின்றது. இலங்கையில் முதல்த்தடவையாக எங்கள் பொலீஸை தேர்தல் இயக்கத்திற்காக ஈடுபடுத்தினார்கள். சமுதாய பாதுகாப்பு குழுக்களை சேரக்கத் தொடங்கினார்கள். ஓ.ஐ.சீ. கூறுகின்ற அளவுக்கு பிரதேசத்தின் ஜீப் வண்டிகள், உணவு, கதிரைகளை கொண்டுவரவேண்டும். வெல்லவாயவில் நான் கண்டேன் பிரதேசத்தின் ஜீப் வண்டிகள், உணவு, கதிரைகளை ஏற்றிக்கொண்ட டிரக் வண்டிகள் தேர்தல் வேலைகளுக்காக அங்கே. அவர்கள் அரச அதிகாரத்தைப் பயன்படுத்தியே தேர்தல் வேலைகளை செய்துவருகிறார்கள்.
இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணத்தை இலட்சக்கணக்கில் செலவிட்டு இசை நிகழ்ச்சியை நடாத்துகிறார்கள். அவை தொடர்பில் கணக்காய்வு விவாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும். எந்தவிதமான சட்டவிரோதமான கொடுப்பனவுகளுக்கும் நீங்கள் கையொப்பமிட வேண்டாமென நாங்கள் அமைச்சு செயலாளர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறோம். உங்கள் மீது எமக்கு தீவிர நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் இருக்கின்றது. இந்த வேலையை நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள் இரச உளவுச்செவை மதிப்பாய்வு ஒன்றினை மேற்கொண் வந்தது. அது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கான காரணம் அந்த மதிப்பாய்வினை செய்துகொண்டிருந்தவர்கள் தேசிய மக்கள் சக்திக்கு சார்பானவர்கள் என்பதாலாகும். தற்போது நாடு பூராவிலும் "இந்த தடவை திசைகாட்டிக்கே" என்ற செய்தியுடன் நாட்டு மக்கள் அணிதிரண்டுள்ளார்கள். ரணிலும் பணத்தாலும் பலத்தாலும் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை தடுத்துவிட முடியாது. இப்போது அவர்கள் அனைவரும் ஒரே மேடையில். பழைய பகைகளை மறந்துவிடவேண்டியநிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அவர்கள் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக ஒரே மேடையில் குழுமி வருகிறார்கள். எமக்க மிகவும் குறுகிய காலமே இருக்கிறது. இந்த மஹியங்கன தொகுதியை அதிகப்படியான மேலதிக வாக்குகளால் வெற்றிபெறச்செய்விப்பதற்காக அயராது உழைக்கவும்.
அடுத்ததாக நாங்கள் இந்த நாட்டைக் கட்டியெழுப்பவேண்டும். சட்டத்தின் மன் அனைவருமே சமமானவர்களே. பணம் - பலம் பேதிமின்றி சட்டம் அனைவருக்கும் சமமானதாக அமையவேண்டும். எங்கள் அரச சேவையை வினைத்திறன் கொண்டமதாக மாற்றியமைத்திட வேண்டும். ஆட்சேர்ப்பு, பதவியுயர்வு, இடமாற்றம் என்பவற்றை அரசியல் தலையீடுகள் அற்றவையாக மாற்றுவோம். அர்ப்பணிப்புடன் முன்நோக்கி நகர்கின்ற ஓர் அரச சேவையை உருவாக்கிடுவோம். தொழில்முயற்சியொன்றை மேற்கொள்ள, கல் வேலைத்தலமொன்றை அமைக்க, ஹோட்டலொன்றைப்போட அரசியல்வாதிக்கு பகா கொடுக்கின்ற யகத்திற்க முற்றுப்புள்ளி வைப்போம். கடந்த 44 வருடங்களிலும் நேரலடி வெளிநாட்டு முதலீடு 22000 கோடி டொலராகும். வியட்நாமிற்கு 2022 அம் அண்டில் மாத்திரம் 2300 கொடி டொலர்களாகும். பரிசுத்தமான முதலீட்டாளர்கள் எவருமே இலங்கைக்கு வருவதில்லை. புதிய கைத்தொழில்களை சேவைகளை ஆரம்பிக்க வருமாறு நாங்கள் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். எமது நாட்டு ஊழலும் மோசடியுமற்ற நாடாக மாறவேண்டும். தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமே அந்த வேலையை செய்யும்.
நாங்கள் எதிர்நோக்குகின்ற பிரதான பிரச்சினை கிராமிய வறுமைநிலையாகும். வறுமை காரணமாக பிள்ளைகளுக்கு சிறந்த கல்வி கிடையாது, நோயக்கு மருந்து கிடையாது, நல்ல போசாக்கான உணவுவேளையொன்று கிடையாது. மகிழ்ச்சியும் பொழுதுபோக்கும் கிடையாது. கலாச்சார வாழ்க்கையொன்று கிடையாது. சமூக அங்கீகாரம் கிடையாது. நாங்கள் வசிப்பதோ 70 அல்லது 80 வருடங்கள்தான். எமது பிரஜை வறுமையின் கிளட்டினுக்கு இரையாகி செத்துமடிய வேண்டுமா? இந்த பேரழிவிலிருந்து எங்கள் மக்களை விடுவித்துக்கொள்ள வேண்டாமா? தேசிய மக்கள் சக்தியாகிய நாங்கள் கிராமிய வறுமையை ஒழிக்கின்ற அரசாங்கமொன்றையே அமைத்திடுவோம். எமது கிராமிய கமக்காரன் வயலை விதைத்து, விளைச்சலை பெற்று, களத்துமேட்டிலேயே நெல்லை விற்கிறான். கடனை மீளச்செலுத்தி, உரக் கடைக்கும் , சாமான வாங்குகின்ற கடைக்கும் செலத்திய பின்னர் கையில் பணம் எஞ்சுவதில்லை. கமக்காரன் கடன்பொறிக்குள் சிக்கி இருக்கிறான். இந்த கடன்பொறிலிருந்து கழற்றி எடுக்காவிட்டால் கமககாரரின் வாழ்க்கையை முன்னேற்ற முடியாது. மெண்டிஸ், தயா கமகே போன்றவர்களின் கடன்கள் கோடிக்கணக்கில் வெட்டிவிடப்படகின்றது. கமக்கரர்களை கடன் சுமையிலிருந்து மீட்டெடுப்பதற்கான திட்டமொன்றை நாங்கள் வகுத்திடுவோம். 2001 இல் சந்திரிக்கா அரசாங்கத்திற்கு அதிகாரம் இல்லாமலபோன வேளையில் எமது 10 உறுப்பினர்கள் இருந்தார்கள். நாங்கள் ஒத்துழைப்பு தருகிறோம் ஆனால், கமக்காரரின் கடன்களை வெட்டிவிடவேண்டுமென நாங்கள் கூறினோம். அன்று சந்திரிக்கா நன்னடத்தை அரசாங்கக் காலத்தில் 25,000 ரூபாவிற்கு குறைவான எல்லாக் கடன்களையும் வெட்டிவிட்டார். அதைப்போலவே நாங்கள் மிகவும் குறைந்த வட்டியில் கடன் வழங்குவதற்கான அபிவிருத்தி வங்கிகளை நிறுவுவோம். எந்தவிதமான ஆதனங்களின் பிணையுமின்றி கடன்பெறுவதற்கான வசதிகளை நாங்கள் வழங்குவோம்.
விவசாயத்தை நவீனமயமாக்குவதற்காக புதிய தொழில்நுட்பத்தை நாங்கள் கொண்டுவரவேண்டும். பலம்பொருந்திய பயிர்ச்செய்கைத் திட்டமொன்று அவசியமாகும். தற்பொது விசாய சந்த்தையில் விலைத்தளம்பல் அதிகமாக இடம்பெற்று வருகின்றது. இன்றைய உலக சந்தை தரவுகளின் அடிப்படையிலேயே இயங்குகின்றது. மோப்பம்பிடித்து பயிர்செய்த காலம் மலையேறிவிட்டது. நாங்கள் கமக்காரனுக்கு பயிர்ச்செய்கைக்கு அவசியமான தரவுகளைப் பெற்றுக்கொடுப்போம். அப்போது உங்களால் உற்பத்திக்க அவசியமான நிலையான விலையைப் பெற்றுக்கொள்ள முடியும்.
எமது பிள்ளைகளை கிராமிய பொருளாதாரத்தில் இருந்து வெளியில் எடுக்கவேண்டும். அதனை சாதிக்க கல்வி அவசியம். நாங்கள் மிகச்சிறந்த கல்விக் கொள்கையொன்றை வகுத்திடுவோம்.கல்வியில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவோம். இன்றைய கல்வித் திட்டம் பெற்றோருக்கு பாரிய சுமையாகும். தேசிய மக்கள் சக்தியின்கீழ் கல்வியென்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். பிரதேச செயலகத்திற்கு உத்தியோகத்தர்களை நியமிப்போம். ஒரு உத்தியோகத்தருக்கு மூன்று நான்கு பாடசாலைகள் ஒப்படைக்கப்படும். தொடர்ச்சியாக பிள்ளை பாடசாலைக்கு வராவிட்டால் உத்தியோகத்தர் பிள்ளையின் வீட்டுக்குச்செல்லவேண்டும். அந்த பிள்ளையை பாடசாலைக்கு எடுத்துச்செல்லவேண்டும். பிள்ளைகள் இடைநடுவில் கல்வியை கைவிட்டுச்செல்ல முடியாதவகையில் கல்விச் சீர்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும். 2030 அளவில் உலகிற்க 19 மில்லியன் மென்பொருள் பொறியியலாளர்கள் தேவைப்படுகிறார்கள். வீட்டிலிருந்தே தொழில்புரிய முடியும். அவற்றக்கு அவசியமான 4 ஜீ, 5 ஜீ, ஃபைபர் வசதிகளை நாங்கள் கிராமங்களுக்கு வழங்குவோம். அதனால்த்தான் ரெலிகொம்மை விற்க நாங்கள் இடமளிப்பதில்லை. ரெலிகொம்மை பாதுகாத்து இன்ரநெற் வலையமைப்பு கிராமங்களுக்கும் கிடைக்கத்தக்க வகையில் நாங்கள் அமைத்துக்கொடுப்போம். உலகிற்க அவசியமான பொறியியலாளர்களில் ஒரு தொகுதிய மஹியங்களை பிள்ளைகளுக்கும் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் நாங்கள் கல்வித்துறையில் மாற்றத்தை ஏற்படுத்துவோம். இலங்கையில் மதலத்தடவையாக பொதுமக்களின் அரசாங்கமொன்றை அமைத்திடுவோம். அதுதான் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம். அதற்காக நாமனைவரும் ஒன்றுசேர்வோம்.
இந்த உலகில் முன்னேற்றமடைந்த நாடாக மாற்றும்வரை ஒவ்வொரு பிரஜைக்கும் உணவு வழங்குகின்ற பொறுப்பினை நாங்கள் எற்றுக்கொள்கிறோம். தேசிய மக்கள் சக்தியின் முதலாவது படிமுறை சிறந்த சுகாதார சேவை, பிரஜைகளுக்கு உணவு, உணவு பெற்றுக்கொள்வதற்கான வசதியற்றவர்களுக்கு மானியம் வழங்குவதற்கான வேலைத்திட்டமொன்றை நாங்கள் அமைத்திடுவோம். எமது அரசாங்கத்தை நாங்களே அமைத்துக்கொள்வோம். இது எங்கள் வாழ்க்கையில் மிகமுக்கியமான காலப்பகுதியாகும். இந்த நாட்டினதும் மக்களினதும் தலைவிதியை தீர்மானிக்கின்ற இரண்டு மாதங்களாகும். கைவிடவேண்டாம். ஒன்றிணைவோம். மாற்றியமைத்திடுவோம்.
Monday, July 29, 2024
ஆட்சியாளர்களால் எமது பயணத்தை தடுக்கமுடியாது - அநுர குமார திசாநாயக்க
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »