கொழும்பின் புறநகர் பகுதியான பாணந்துறை பகுதியில் இடம்பெற்ற பொசன் போயா தன்சலின் போது கருவாட்டு கறிக்குள் விழுந்த 9 வயது சிறுமி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுமி பாணந்துறை - பெக்கேகம பிரதேசத்தில் வசித்து வந்த ஷயானி மெதும்சா (09) எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொசன் போயாவை முன்னிட்டு கடந்த 23ம் திகதி தனது தாயுடன் சாப்பாட்டு தன்சலுக்கு குறித்த சிறுமி சென்றுள்ளார்.
இந்நிலையில், அங்கு அடுப்பில் வெந்துகொண்டிருந்த கருவாட்டு கறிக்குள் சிறுமி விழுந்ததால் உடல் பொசுங்கி மிகவும் ஆபத்தான நிலையில் பாணந்துறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
தொடர்ந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று குறித்த சிறுமி பரிதாபரமாக உயிரிழந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.