ஆசிய கிண்ணத்தை வென்ற சமரி அதபத்து உள்ளிட்ட
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்துத் தெரிவித்தார்.
மைதானத்தில் வெற்றிக்கிண்ணத்துடன் நின்ற அணி தலைவி சமரி அதபத்துவுக்கு தொலைபேசியில் தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
"உங்களுடைய தோல்வியற்ற பயணத்திற்கு உங்கள் திறமை, அர்ப்பணிப்பு மற்றும் கூட்டு செயற்பாடு சான்றாக அமைகிறது.நீங்கள் எமது நாட்டை கௌரவப்படுத்தியுள்ளீர்கள். என ஜனாதிபதி தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்தார்