ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர்
மைத்ரிபால சிறிசேன உட்பட கட்சிப் பிரதிநிதிகளுக்கு பிறப்பிக்கப்பட்ட 9 தடை உத்தரவுகளை ஒக்டோபர் 9ஆம் திகதி வரை நீடிக்க கொழும்பு பிரதான மாவட்ட நீதிபதி சந்துன்விதான இன்று (30) உத்தரவிட்டுள்ளார்.அமைச்சர் மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளிலிருந்து நீக்கி, வேறு நபர்கள் அந்தப் பதவிகளில் பணியாற்றுவதைத் தடுக்கும் வகையில் இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் மஹிந்த அமரவீர, தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க மற்றும் பொருளாளர் லசந்த அழகியவன்ன ஆகியோர் மூன்று வழக்குகளை பரிசீலித்ததன் பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் இந்தத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சாரதி துஷ்மந்த, பைசர் முஸ்தபா மற்றும் சரத் ஏக்கநாயக்க ஆகியோருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.