Our Feeds


Saturday, July 27, 2024

SHAHNI RAMEES

ரணில் - பெசில் பேச்சு இணக்கமின்றி முடிவு...!

 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பெசில் ராஜபக்ஷவிற்குமிடையில் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கூட்டணி அமைப்பது தொடர்பாக விரிவாக கலந்துரையாடியுள்ளனர்.



ஜனாதிபதித் தேர்தலில் தமக்கு ஆதரவளித்தால் உள்ளூராட்சி தேர்தலில் 30 வீதமும் மாகாண சபை தேர்தலில் 35 வீதமும் பாராளுமன்ற தேர்தலில் 40 வீதமும் போட்டியிடுவதற்கான ஒதுக்கீடுகளை செய்வதாக ரணில் விக்ரமசிங்க கூறியபோது உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு 90 வீதமும் பாராளுமன்றத் தேர்தலில் 70 வீதமும் மாகாண சபை தேர்தலில் 70 வீதமும் பெசில் ராஜபக்ஷ கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



இதன்படி, இந்த கலந்துரையாடல் எவ்வித தீர்வுமின்றி முடிவடைந்துள்ளதோடு, ஜனாதிபதி மற்றும் பெசில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான மற்றுமொரு முக்கியத்துவம் வாய்ந்த கலந்துரையாடல் நாளை (28) நடைபெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.



இந்த நிலையில், 29ஆம் திகதி தமது ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பிலான அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் பொதுஜன பெரமுன அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »