சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி விவியன் பாலகிருஷ்ணனின் அழைப்பின் பேரில், அமைச்சர் அலி சப்ரி இந்த விஜயத்தை முன்னெடுக்கிறார்.
இந்த விஜயத்தின் போது, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சிங்கப்பூர் அமைச்சருடன் இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சிங்கப்பூரில் 09ஆம் திகதி நடைபெறவுள்ள 2024 ஆண்டிற்கான ரொய்ட்டர்ஸ் நெக்ஸ்ட் ஆசிய-பசிபிக் உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.