Our Feeds


Monday, July 15, 2024

Sri Lanka

நாட்டை கட்டியெழுப்பியது உண்மையெனில் தேர்தலை நடத்த அச்சம் ஏன்? - ஜனாதிபதிக்கு ஜீ.எல் கேள்வி



ஜனாதிபதி தேர்தலை யாராலும் ஒத்திவைக்க முடியாது என முன்னாள் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் கூறுகிறார்.


நேற்று (14) காலை அட்டமஸ்தானாதிபதி கலாநிதி பல்லேகம ஹேமரதனவை விஜயம் செய்து ஆசி பெற்றதாகவும், ஜனாதிபதி தேர்தல் நடத்துவது தொடர்பாக அட்டமஸ்தானாதிபதி கலாநிதி ஹேமரத்தன தேரருடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடியதாகவும் அவர் தெரிவித்தார்.


அதனையடுத்து, லங்காராம விகாரைக்குச் சென்ற முன்னாள் அமைச்சர், விகாரை பீடாதிபதி ரலபனாவே தம்மஜோதி தேரரின் ஆசிர்வாதத்தைப் பெற்றுக்கொண்டதுடன், நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடினார்.


பின்னர் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதற்கு எந்தவொரு நபருக்கும் இடமில்லை.


நாட்டின் பொருளாதாரம் வலுவாக கட்டியெழுப்பப்பட்டுள்ளதாகவும், நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரகடனப்படுத்தினால், தேர்தலை நடத்துவதற்கு அச்சம் ஏது என வினவியிருந்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »